தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில், தனது மனைவியை கணவன் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார்.
கொட்டாவெல,பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய குறித்த பெண், தனது தாய் வீட்டில் இருந்தபோது கணவனால் படுகொலை செய்யப்பட்டார்.
இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews