மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

Semmani Manhole

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சில மனித என்புத்தொகுதிகள் மண்டையோட்டு தொகுதியின்றி காணப்பட்டுள்ள அதேநேரம், சில இடங்களில் மண்டையோட்டு தொகுதிகள் குவியல்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், நேற்றைய அகழ்வின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சிறுவர்களின் 3 என்புத்தொகுதிகள் உள்ளடங்கலாக 4 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 467 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 444 என்புத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version