“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான பொது பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் . மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
“பொருளாதார நெருக்கடியால், மக்கள் பட்டினியில் வாடும் நிலை உருவாகியுள்ளது. வடக்கில் இருந்து இதுவரை 16 பேர் தமிழகம் சென்றுள்ளனர். இந்நிலைமை தொடரக்கூடாது.
தற்போதைய நிலைமையில் இருந்து மீள்வதற்கான பொறிமுறை அவசியம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
#SriLankaNews