முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து உயர் நீதிமன்றம் தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.