பொருளாதார நெருக்கடிக்குள் உடன் தீர்வை வழங்க முடியாது!! சு.க.தெரிவிப்பு!
கொரோனாத் தொற்றால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார தெரிவித்தார்.
தற்போது ஆசிரியர்,அதிபர்களின் சம்பளப் பிரச்சினை பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்த அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ‘சுபீட்சத்துக்கான நோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
எனவே எடுத்த எடுப்பில் உடனடியாக தீர்வு வழங்க முடியாது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகிலும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதால், பொருளாதார ரீதியாக எமது நாடு பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.
Leave a comment