El Nino
இலங்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

Share

தற்போது நிலவும் வெப்பநிலைமையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரிகை விடுத்துள்ளது.

இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர கூறியுள்ளார்.

வெப்பத்தாக்கம் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் இந்த வெப்பமான சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், உடல் நீரிழப்புக்கு உள்ளாவதை தடுக்க சுத்தமான தண்ணீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல வெப்பநிலையானது எல் நினோவால் அதிகரித்துள்ளதால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...