புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது!

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது!

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இந்த செயலை டிக் டொக் வீடியோவாக உருவாக்கி, புறாக்களின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் வீடொன்றில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நாளை (30) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Exit mobile version