பஸ் குடை சாய்வு – பலர் படுகாயம்!
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்தப் பகுதியில் வீதித் திருத்த பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ், மழை காரணமாக சறுக்கி குடை சார்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment