புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இன்று (22) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறும்.
அதனை அடுத்து, பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
#SriLankaNews