பயங்கரவாத சட்டத்தை தக்கவைத்துக்கொள்ளவே கரும்புலித் தாக்குதல் கதை! – கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

Selvarasa Gajendran 1

பயங்கரவாத தடைச்சட்டத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசால் கரும்புலி தாக்குதல் கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது – என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தொடர்வதற்கான ஒரு நகர்வாகவும் இது இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டார்.

அதேவேளை, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version