tamilni 47 scaled
இலங்கைசெய்திகள்

பதவி விலகிய மஹேல ஜயவர்தன

Share

பதவி விலகிய மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோகராக கடமையாற்றிய முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) பதவி விலகியுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தாம் பதவி விலகுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

மஹேல ஜயவர்தனவின் பதவிக் காலத்தில் இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹேல ஜயவர்தனவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக அண்மையில் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை வெளியேறியமை பல்வேறு மட்டங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தன தனது பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...