நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் சிறிய அளவிலான மோதல் நிலை நேற்றைய தினம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்த சம்பவத்தில் சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்றை, வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த மோதல்களின் போது உயிரிழந்த கைதிகளின் மரண விசாரணை முடிவுகள் திறந்த தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதுடன் , அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மரண விசாரணை அறிக்கைகள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

