வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த நபரொருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த, சந்தேகநபர் மோசடி செய்த தொகை இரண்டுரை கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும், சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறி சந்தேகநபர் இந்த மோசடியைச் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், அவர் வீடுகளுக்கான பணத்தை தவணை முறையில் செலுத்த முடியும் எனக் கூறி இந்த மோசடியை செய்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர் தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

