உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
மொட்டு கட்சியின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கும், தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
” உள்ளாட்சி சபைத் தேர்தல் அடுத்த மார்ச்சில் நடைபெறலாம். எனவே, தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.” என பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
” சேர், மக்கள் பக்கம் தலைகாட்ட முடியவில்லை, எப்படி திடீர் தேர்தலுக்கு தயாராவது, ” என தொகுதி அமைப்பாளர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பஸில் ” ஆரம்பத்தில் எதிர்ப்பு வரும், மக்களுடன் உரையாடுங்கள். நிலைமையை தெளிவுபடுத்துங்கள். எல்லாம் சரிவரும். ” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment