தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம்
பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சிசுவும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
Leave a comment