தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு!
சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
33 வயதுடைய ப.நிறோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நஞ்சருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment