கப்பல் சேவை
இந்தியாஇலங்கைசெய்திகள்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை: பச்சைகொடி காட்டிய மோடி

Share

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை: பச்சைகொடி காட்டிய மோடி

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில் அவரும் குறித்த திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் சுமார் 18 கிலோமீட்டர் தூரமாக இருக்கும் நிலையில் விரைவாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊடாக பொருட்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.

காங்கேசன்துறை – காரைக்கால் கப்பல் சேவை மாற்றி காரைக்கால் – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்தால் விரைவானதும் வினைதிறனான சேவையை வழங்க முடியும் என மோடியிடம் பேசியுள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...