தனியார் மயமாகிறது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!

srilankan airlines9989

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பெறப்படும் பணத்தில் நிறுவனத்தின் கடனை தீர்க்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தரை சேவை கையாளுகை பிரிவை தனி நிறுவனமாக நிறுவி அதன் ஒரு பகுதியை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நிறுவனத்தை மீட்பதற்கு இதுவே சிறந்த நடவடிக்கையாகும் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் 966 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version