அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 57 இறப்புகள் பதிவாகி இருந்ததுடன் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 79,016 ஆக காணப்பட்டது.
அறிக்கையின்படி, ஜூன் 21,534 மற்றும் ஜூலை 24,739 மாதங்களில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதில், அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

