ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!

1619065984 President Gotabaya Rajapaksa on changes to be made in education L 2

ஆளுங்கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை 22ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனை, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சனைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என தெரியவருகின்றது.

அமைச்சர்கள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையிலேயே, ஆளுங்கட்சியினரை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

#SriLankaNews

Exit mobile version