செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

question mark

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த நிலையில் இந்த அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசியல்வாதிகள் மட்டுமன்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது மக்களுக்கும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் விடுத்த அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஏனெனில், முறையான வழிகாட்டல்கள் இன்றி குறித்த பொலிஸ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரமான பரிசோதனைச் சபை ஏற்றுக்கொண்டுள்ள நிபந்தனைகளுக்கும் காவல்துறையினரின் இத்தகைய அறிவித்தலுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், அண்மைக்காலங்களில் சொத்துக்களை கொண்டவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, கடந்த 3 தசாப்தங்களாக இந்நாட்டில் கறுப்புப் பொருளாதாரம் பாரிய அளவில் பரவியுள்ளதுடன், அதனை அடக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version