நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின் இருப்பு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருப்பில் 1,000-க்கும் மேற்பட்ட தடிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் போது, கைதிகள் சிறைச்சாலை சமையலறையிலிருந்து தேங்காய்களை எடுத்து அதிகாரிகளைத் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கு பல கூர்மையான ஆயுதங்களும், இரும்புக் கம்பிகளின் இருப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

