sanda pandara
அரசியல்இலங்கைசெய்திகள்

சாந்த பண்டாரவின் சுதந்திர கட்சி பதவிகள் நீக்கம்!!

Share

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரச் செயலாளர், பிரதிச் செயலாளர், தம்பதெனிய தேர்தல் அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் அமரத் தீர்மானித்த போதிலும் பண்டார இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பண்டாரவை மத்திய குழுவிலிருந்து நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஷசீந்திர ராஜபக்ச அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பண்டார பதவியேற்றார்.

மறுபுறம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் பதவியை ஏற்றுக்கொண்டதாகவும், அண்மையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவன் எனவும் பண்டார தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...