சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு
தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிற்றர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் திருமண நிகழ்வு நடத்தப்படுவதன் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை எனவும் திருமணத்தின் பின்னர் நாடு முடக்கப்படும் எனவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்படாமைக்கும் தனது மகனின் திருமண நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
Leave a comment