கொவிட்டால் இளம் மருத்துவர் சாவு!!
கொரோனாத் தொற்றால் ராகம மருத்துவமனையின் இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ராகம மருத்துவமனையில் பணியாற்றிவந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் (ஜனூன்) என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்று ஏற்பட்டதை அடுத்து தாம் பணியாற்றிய அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனாத் தொற்றின் பாதிப்பு அதிகரித்தமையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment