கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

24 667f7cfe0ff26 20

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பின் (Colombo) பல பகுதிகளில் இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த அறிவிப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, கொட்டிகாவத்தை – முல்லேரிய பிரதேச சபைக்கு இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே அனல் மின் நிலையத்திலிருந்து நீர் விநியோகம் செய்யும் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்வதற்காகவே இந்த 18 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version