கொரோனாத் தொற்று – முக்கிய நகரங்கள் முடக்கம்!!
அநுராதபுரம்-கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா – மரதஹமுல்ல நகரம் நாளை திங்கட்கிழமை முதல் ஒருவாரத்துக்கு மூடப்படவுள்ளது. அம்பலந்தோட்டை நகரம் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.