25 6938095dc8d5d
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர் புனரமைக்கும் பாலத்தை யாழ். துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார்!

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியின் 11ஆவது கிலோமீட்டரிலுள்ள பாலத்தின் புனரமைப்புப் பணிகளை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி இன்று (டிசம்பர் 9) பார்வையிட்டார்.

இந்தப் புனரமைப்புப் பணியில் இந்திய இராணுவத்தினரின் ‘ஒப்ரேஷன் சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) அணியினர், இலங்கை இராணுவம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள், ‘ஒப்ரேஷன் சாகர் பந்து’ நடவடிக்கையின் மூலம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே A-35 வீதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன.

தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இந்தியா இதுவரையில் உணவு, உடை, மருத்துவம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.

பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...