கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இன்று காலை டிப்பர் வாகன சாரதிகளுக்கு ஊரடங்கு வேளையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டு பங்கீட்டு அடிப்படையில், மக்களுக்கு எரிபொருள் வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பங்கீட்டு அட்டைக்கான மண்ணெண்ணெய்யை வழங்காது, இன்று ஊரடங்கு வேளையில், நூறுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகன சாரதிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இதனால் குறைத்த பகுதியில் ஆதிதியின்மை ஏற்பட்டது. தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தமது இட தேவைக்காண எரிபொருளை தமக்கு வழங்காது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
#SriLankaNews

