16 30
இலங்கைசெய்திகள்

காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : தமிழர் தரப்பு விடுத்துள்ள கோரிக்கை

Share

காவல்நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண் : தமிழர் தரப்பு விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு – மருதானை காவல்நிலையத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் (P.Ayngaranesan) கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்ப் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மருதானை காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது இறந்துள்ளார்.

மருதானை காவல்துறையினர் இந்த மரணத்தை உயிர்மாய்ப்பு என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இந்த மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

காலங் காலமாக சிறிலங்காவில் காவல்துறையினர் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ளநிலையில், இந்தப் காவல் நிலைய மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...