4 46
இலங்கைசெய்திகள்

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

Share

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(archuna) தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நகர மறுத்துவிட்டார், அதே நேரத்தில் அவர் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்த சம்பவத்தினால் தாம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்ற ஆசனத்தில் நடந்த சம்பவத்தால் என்னால் வீதியில் நடக்கக்கூட முடியவில்லை. ஊடகங்கள் 45-50 நிமிட பேட்டி எடுத்தன. நான் சாப்பிட்டுவிட்டேனா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு நான் ஆம் என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் நான் விடுதலைப் புலிகளின் அங்கமா என்று கேள்வி எழுப்பினர் அதற்கு நான் இல்லை என்று பதிலளித்தேன்.

ஆனால், இரண்டாவது கேள்விக்கு எனது பதிலைத் தவிர்த்துவிட்டனர், என்னால் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்

நிலைமையை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் தனக்கு வழங்கப்படும் தேவையான பாதுகாப்பை எவ்வாறு மற்றும் எப்போது ஏற்பாடு செய்ய முடியும் என நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பதிலளித்த நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொது பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்துமூலக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...