கசிப்பு போத்தல்களுடன் பெண் கைது

image cff44d7884

தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு, புண்ணை நீராவி பகுதியில் 54 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீதிச் சோதனை நடவடிக்கையில் நேற்று (26) அதிகாலை ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் கசிப்பு போத்தல்களுடன் சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து  54 போத்தல் கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணை, கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (27) ஆஜர்படுத்திய போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என தருமபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version