ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதி ஊரடங்கு நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் 1ஆம் திகதி நீக்கப்படுமாயின், ஒக்டோபர் 2 ஆம் திகதிமுதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன அறிவித்துள்ளன.
மேலும், ஓகஸ்ட் 22 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவேண்டி சீட்டிழுப்புகள் யாவும் ஒக்டோபர் 3 ஆம் திகதிக்குப் பின்னர், அடுத்தடுத்த நாள்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment