ஐக்கிய மக்கள் சக்தியின் 6-வது ஆண்டு நிறைவு: கதிர்காமத்தில் விசேட ஆசிர்வாத பூஜைகள்!

MediaFile

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, தனது 6 வருட அரசியல் பயணத்தைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் ஆசி வேண்டி கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் பெப்ரவரி 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசேட வழிபாடுகளை முன்னெடுத்தது.

மஹாசென் தேவாலயத்தில் விசேட பூஜைகளுடன் ஆரம்பமான நிகழ்வுகள், அஷ்டபலபோதியவில் அரச மரத்திற்கு ‘அட்டபிரிகரை’ வழங்கி வைக்கும் நிகழ்வுடன் தொடர்ந்தன.

ரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர தூபிக்கு விசேட வஸ்திரம் சாத்தும் ‘கப்ருக்க’ பூஜை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.சர்வராத்திரிய (முழு இரவு) பிரித் பாராயணம் இடம்பெற்றதுடன், இன்று காலை மகா சங்கத்தினருக்குத் தானம் வழங்கி ஆசி பெறப்பட்டது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், கட்சிச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படுவதுடன், ‘சக்தி’ மற்றும் ‘பிரபஞ்சய’ போன்ற திட்டங்கள் ஊடாகக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பாரிய சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version