22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

Share

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, அமைதி, நீதி உட்பட 17 இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் வகையிலான இலக்குகளை முன்வைத்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதன்படி நேற்று வெளியி;டப்பட்ட பட்டியலில், மொத்தம் 193 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா, 67 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள், முதன்முறையாக இந்தியா இடம்பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா 109ஆவது இடத்திலும், 2023ல் 112ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த வரிசையில், சீனா, 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா, 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன. தரவரிசையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

பூட்டான், 74வது இடத்தையும், நேபாளம், 85வது இடத்தையும், பங்களாதேஸ் 114வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதேபோல், கடல்சார் அண்டை நாடுகளான மாலைத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 53 மற்றும் 93வது இடங்களையும் பிடித்துள்ளன.இலங்கை உணவகம்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...