எம்.பிக்களுக்கு ஆப்பு! – இரண்டு மாதங்கள் அவகாசம்!!!

1622969011 water bill 2

இரண்டு மாத காலத்திற்குப் பின்னர் தமது குடியிருப்புகளுக்கு நீர் கட்டணத்தைச் செலுத்தாத நாடாளுமுன்ற உறுப்பினர்களின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளார்.

அந்தக் குழுவின் அதிகாரிகளுக்கும், சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், சபாநாயகர் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.

குடிநீர் கட்டணம் செலுத்தாத உறுப்பினர்களின் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதன் பேரில் நேற்று (செப்.15) பட்டியல் கையளிக்கப்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் (வணிகம்) பியால் பஸ்மநாத தெரிவித்தார்.

நாடாளுமன்ற குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர்களின் நிலுவையில் உள்ள நீர் கட்டணத்துக்காக மூன்று மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை சபை மீளப்பெற வேண்டியுள்ளதாக பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

srilankanews

Exit mobile version