எகிறின எரிவாயு விலைகள்!!
லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 145 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து இந்த எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாகும்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Leave a comment