சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்று மறைந்திருந்த சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார்,82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே, தப்பிச்சென்ற சாரதியை மாரவில தலைமையக காவல் நிலையபோக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

