இளம் பெண்ணும், குழந்தைகளும் மாயம்! – வவுனியாவில் கணவர் முறைப்பாடு!!
வவுனியா பூந்தோட்டம் முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரும், இரு மகள்களும் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சற்குணசிங்கம் தமிழினி மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா, கனிஸ்கா ஆகியோர் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவர், மனைவி, இரு பிள்ளைகள் என நால்வர் வசித்து வந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி கணவர் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இதுதொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பில் தகவல் தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0777111103, 0775945839 என்ற இலக்கத்துக்கோ அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Leave a comment