bike accident
இலங்கை

இளம் பெண்ணின் பட்டமளிப்பு விழா – கணவனையும் சகோதரனையும் இழந்த சோகம்.

Share

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் மகியங்கனை – பதியதலாவ வீதியில் தம்பான 54ஆம் மைல்கல் பிரதேசத்தில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியாமையினால் குறித்த விபத்தானது சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளின் ஓட்டுநரான 31 வயதுடைய திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும், அவரது மனைவியின் தம்பியான 23 வயதுடைய இளைஞனுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மரணங்கள் தொடர்பிலான மரண விசாரணைகள், மகியங்கனை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.

உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். பல்கலைக்கழகத்தில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் சென்ற போதே குறித்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...