இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் திடீரென வாந்தியெடுத்து மயக்கமடைந்ததை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுவர முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வெளிநோயாளர் பிரிவில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
Leave a comment