7 29
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள இந்திய உளவுத்துறை ராே …! அர்ச்சுனாவின் பின்னணி – சாடும் அமைப்பாளர்

Share

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள இந்திய உளவுத்துறை ராே …! அர்ச்சுனாவின் பின்னணி – சாடும் அமைப்பாளர்

இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் சூது பொருளாதாரம் ஒன்றையே மேற்கொள்ளப்போகிறது. அதாவது சூது விளையாடி பணம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தயாரிக்கவே முயற்சிக்கிறது.

சீனாவிடம் (China) கடன் பெற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பத ன் விளைவு என்ன என்பதை எங்களுக்கு கண்டுகொள்ள முடியும்.

துறைமுகத்தை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தார்கள்.

அதேநிலையே இந்தியாவுடனும் எங்களுக்கு ஏற்படும். அத்துடன் அதானிக்கு உலகில் எங்கு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் இங்கு அதானியுடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது யாரும் கேட்டதற்கு ஜனாதிபதி தெரிவித்த ஒன்று அல்ல. இது முன்கூட்டிய அறிவிப்புகள். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துக்கு 2016ல் பாரிய எதிர்ப்பு வந்தது.

இறுதியில் அந்த ஒப்பந்ததை வாபஸ் பெற்றுக்கொண்டது.அந்த எதிர்ப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பாரியளவில் முன்னின்று செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டோம்.

ஆனால் மீண்டும் அந்த எட்கா ஒப்பந்தம் பேச்சுக்கு வந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கையின் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்க செயற்பட்டு வருவதாக எமக்கு நினைக்க தோன்றுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீரென தோன்றினார். இப்போது அவர் இல்லை.

ஆனால் இன்று வடக்கின் பேச்சாளராக செயற்பட்டு வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள வைத்தியர் அர்ச்சுனா. அர்ச்சுனா போன்றவர்களை கொண்டு வந்து இந்தியா என்ன செய்யப்போகிறது என எமக்கு தெரியாது.

அதேநேரம் உத்தியோகபூர்வமற்ற தகவலின் பிரகாரம் இந்தியாவின் ராே ஒத்து சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள்.

அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...