இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல்
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தாலும், கொரோனா இறப்புக்கள் 48.8 வீதத்தாலும் அதிகரித்துள்ளன என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், அத்தியாவசிய காரணங்கள் இன்றி நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்தக் கருத்துகளில் இருந்து நான் ஒருபோதும் மாறப் போவதில்லை. தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் நாடு தற்போது ஆபத்தான நிலையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment