இரு டோஸ் தடுப்பூசி பெற்றோர்க்கு தொற்று வீதம் குறைவு!!
தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 65 வீதத்தால் குறையும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
88 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறினார்.
கொழும்பு, மஹரகம, மாலபே, வவுனியா, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Leave a comment