இன்றும் பிரதமர் இல்லம் முற்றுகை!

1649165581 1649165490 pro L

அரசை பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, கொழும்பு 7, விஜேராமவில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version