ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது!
ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து வாள்கள், கோடரிகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
Leave a comment