‘அஸ்வெசும‘ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது – ஷெஹான் சேமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு , அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறும் பயனாளர்களுக்காக புதிய அளவுகோள்கள் அறிமுகப்படுத்தப்படுவம் வரை , இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் வேறு நிலையற்ற , அனர்த்தங்களை எதிர்கொண்ட வறுமை நிலையிலுள்ள மற்றும் மிகவும் வறுமை நிலையிலுள்ள 4 சமூக பிரிவின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெற மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் 760 000 ஆட்சேபனைகளும், 10 000 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்துக்காக முதலாவது சந்தர்ப்பத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்கும் , அதே போன்று புதிதாக விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களுக்கும் ஆண்டுதோரும் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய முதலாவது சந்தர்ப்பத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆகஸ்ட்டில் விண்ணப்பிக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment