அம்பிட்டிய தேரருக்கு பிணை.. வெளியில் வந்து புலம்பல்

4 28

இன்று காலை கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் வந்த அம்பிட்டியே தேரர், “அப்பாவி சிறுவர்கள் இருவருக்காக நான் நீதி கோரியமையினால் என்னை இன்று காலை பொலிஸார் கைது செய்ததாகவும், தண்ணீர் கூட கொடுக்காமல் இதுவரை வைத்திருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும், நீதிமன்றம் தனக்கு பிணை வழங்கியதாகவும்” கூறினார்.

Exit mobile version