25 68465d12379d8
இலங்கைசெய்திகள்

முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

Share

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற சீன – இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஆணையகத்தின் எட்டாவது கூட்டத்தின் போது, இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

வர்த்தக பணிக்குழு ஒன்றை நிறுவுதல் மற்றும் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் அமைந்துள்ளன.

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ மற்றும் இலங்கையின் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.

இந்தக்கூட்டத்தில், சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...