முகக்கவசங்களின் விலையும் அதிகரிப்பு!

mask

நாளை முதல் முகக்கவசங்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படவுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவிக்கையில்,

முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவற்றை பெறுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளது.

இந்தநிலையில் நாளை முதல் முகக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.

#SriLankaNews

Exit mobile version